கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஏழு வயது கூட நிரம்பாத ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அந்த சிறு குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயையும் கொலை செய்து விட்டு, நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
அவரை தமிழக போலீசார் மும்பையில் கைது செய்தனர். ஆனால், போலீசார் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார் மீண்டும் அவரை கைது செய்தனர்.
இது போன்று அவர் செய்யும் அடுத்தடுத்த குற்றங்கள் அவரை ஒரு சீரியல் கில்லராக காட்டுகின்றன. இதை ஊர்ஜிதப்படுத்தும் 4 காரணங்களை இங்கே பார்க்கலாம்.
காரணம் 1:
பண வசதிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த தஷ்வந்த் சிறு வயதில் இருந்தே மிகவும் சொகுசாக வளர்ந்திருக்கிறார். எதையும் பணத்தால் அடைந்துவிட முடியும். பணம் இருக்கும் வரை எந்த குற்றங்களை வேண்டுமானாலும் மிக துணிச்சலாக செய்யலாம் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
காரணம் 2:
அவரின் வளர்ப்பு சரியில்லை என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தஷ்வந்தின் தந்தை சேகர் அளவு கடந்து செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார்.
தஷ்வந்துக்கு பண போதையை ஊட்டியதே சேகர்தான். தன் மகன் எவ்வித தவறுகளை செய்தாலும் சேகர் சற்றும் தட்டிக்கேட்டது இல்லை என்று கூறப்படுகிறது. தஷ்வந்த் சிறைக்குச் சென்றபோது, ஹாசினியின் பெற்றோரிடம் சேகர் ‘என் மகனை எப்படி வெளியே கொண்டு வருகிறேன் பார்’ என சவாலும் விட்டிருக்கிறார்.
காரணம் 3:
ஹாசினி வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பின்பு, வீட்டில் பெற்றோருக்கு முன்பாகவே போதைப்பொருட்களை மிக தைரியமாக பயன்படுத்தினார் தஷ்வந்த். ஏற்கெனவே அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தியதனால் தான் அவர் பல குற்றங்களை பகிரங்கமாக நடத்தியிருக்கிறார்.
காரணம் 4:
பண ரீதியாக திமிரின் உச்சத்தில் இருந்த தஷ்வந்த் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். தந்தை சேகரின் குணம் தஷ்வந்தை அதிகமாகவே ஆக்கிரமித்திருக்கிறது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
இதை விட.., ஒரு பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த ஒருவன்.., மிக எளிதாக ஜாமினில் வெளியே வரும் வகையில்தான் நமது இந்திய சட்டம் உள்ளது என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்காமல் இல்லை.