விஜய் ரசிகர்களுக்கு திடீர் சோக செய்தி!

விஜய்யின் மெர்சல் படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

1479473396-9675இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இதோடு படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அத்திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. அண்மையில் மெர்சல் படத்தின் 50வது நாள் இத்திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Capturezcc