மனைவி பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் தீ மூட்டி தற்கொலை!

மனைவி பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் தீ மூட்டி தற்கொலை!

மனைவி பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(07) பருத்தித்துறை திக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.தீ மூட்டி எரிந்தவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை திக்கம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் மனைவி பிள்ளைகளை பல ஆண்டுகளாக பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருடைய சகோதரர்களே இவரை பாதுகாத்து வந்துள்ளனர்.

மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த குறித்த நபர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.இவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சகோதரர்கள் இவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக குறித்த  நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சில மணி நேரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.