ஆர்.கே.நகரில்..!! லயோலா கல்லூரி நடத்திய கருத்து கணிப்பு முடிவு வெளியானது..!!

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள RK நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 58 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க சார்பாக மதுசூதனன், தி.மு.க சார்பாக மருது கணேஷ், பாஜ சார்பாக கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் போட்டியிடுகின்றனர். தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், RK நகர் தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் 33 சதவிகிதம் வாக்குகள் திமுகவுக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளது. தினகரனுக்கு 28 சதவிகித வாக்குகளும், அதிமுகவுக்கு 26 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாம் தமிழர் கட்சிக்கு 2.18% , பாஜக 1.23% வாக்குகளையும் பெறும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு 3வது இடமே கிடைக்கும் என்கின்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.