பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டுபேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காசா நகரில் நடைபெற்று வருகின்றன. போராட்ட குழுவினரை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காசா நகரின் மத்தியில் அமைந்த நஸீரத் பகுதியில் இஸ்ரேல் படையினர் இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 25 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான முடிவு சர்வதேச சட்டத்தை மீறியது என்பதோடு, ஒரு அரசியல் முரண்பாட்டையும் பெரும் அழிவுகரமான மத மோதலாக மாற்றும் ஆபத்தையும் கொண்டுவந்துள்ளது என்று ஐ.நாவின் பிரெஞ்சுப் பிரதிநிதி பிரான்சுவா டிலாட்ரே தெரிவித்தார்.