ரசிகர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர்…….

நடிகர்களை எங்கு பார்த்தாலும் அவர்களுடன் எப்படியாவது ஒரு செல்பியாவது எடுத்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் ரசிகர்கள்.

large_deekshith-3489அப்படி, பிரபல கன்னட நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஒரு இடத்திலிருந்து வீட்டிற்கு செல்ல
தனது காரை திறந்துள்ளார்.

அப்போது சில ரசிகர்கள் அவரை காருக்குள் செல்ல விடாமல் நாங்கள் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததால் அவர்களுடன் செல்பி எடுக்க முடியாது என்று கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார் தீக்ஷித்.

அவர் செல்பி எடுக்க முடியாது என்று கூறியதால், அந்த ரசிகர்கள் நடிகரின் காரை பின் தொடர்ந்து கற்களை வீசியுள்ளனர்.

இதனால் கார் மிகவும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தீக்ஷித் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.