விபத்தில் பெண் விஞ்ஞானி தனது கணவருடன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்தியாவின் மும்பை நகரம், சயான்-பன்வெல் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் கணவன் மனைவி ஆகிய இருவர் உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர்.

5a2c2e92c9b5c-IBCTAMILஇதுகுறித்து தெரியவருவதாவது, கோவண்டி பகுதியில் குறித்த இருவரும் உந்துருளியில் பயணித்தபோது மனைவியை ஓரிடத்தில் இறக்கிவிடுவதற்காக கணவன் சாலையோரம் வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது, அவ் வழியாக வந்த பால் தாங்கி பாரவுந்து (milk tanker) ஒன்று இவர்கள்மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோவண்டி பொலிஸார், இருவரது உடலங்களையும் எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின்னரான விசாரணையில், பலியான பெண் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்துள்ளதோடு குர்லா நேரு நகரில் வசித்து வந்த இவர்களுக்கு 19 வயதில் பொறியியல் படிக்கும் ஒரு மகனும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரான நவிமும்பையை சேர்ந்த யோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.