ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உடல்கள் கடலில் சடலங்களாக மிதக்கின்றன. காண்போரின் நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயலின் காரணமாக கடலுக்கு சென்ற ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரை திரும்பவில்லை. இதனால் மீனவ குடும்பங்கள் அனைத்தும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது. மேலும் அவர்களை மீட்டு தரகோரியும் அரசியல் தலைவர்களிடம் மனு அளித்தனர்.
ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் அரசு தாமதம் காட்டியதால், மீனவர்கள் 5 படகுகளில் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருன்றனர். இந்நிலையில் தேடும் பணியில் உள்ள மீனவர்கள் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் கடலில் மீனவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கடலில் மிதக்கின்றன. இந்த வீடியோ காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், மீனவர்கள் உடல் அழுகிய நிலையில் காணப்படுவதுடன், ஒருவரது உடலில் உள்ள பை கட்டப்பட்டு அதில் செல்போன், ஐடிகார்டுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மக்களிடையே பெரும் சோகம் நிலவி வருகிறது.