கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. தமிழகத்தில் கணிசமான அளவு தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்பட்டது.
அதே போல்., புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தை பார்க்க வந்தது எத்தனை பேர் தெரியுமா? வெறும் ஆறுபேர்தான்.
அதிலும் நான்கு பேர் இடைவேளைக்கு பிறகு சென்று விட்டனர். மீதம் இருந்தது இரண்டு பேர் மட்டுமே. அவர்களும் காதல் ஜோடி என்று கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் உரிமையாளர் மின்சார கட்டணத்தையாவது மிச்சப்படுத்தலாமே என நினைத்தார்.
அதன்படி படத்தை பாதியிலேயே நிறுத்த நினைத்த அவர், தியேட்டரில் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடியிடம் சென்று உங்கள் டிக்கெட் கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறோம். எனவே சென்று விடுங்கள் என்று கெஞ்சி உள்ளனர்.
ஆனால் அவர்களோ நாங்கள் முழு படத்தையும் பார்த்தபின்னர்தான் செல்வோம் என பிடிவாதம் பிடித்தனர்.
இதனால் வேறு வழியின்றி முழு படத்தையும் இரண்டு பேருக்காக மட்டுமே ஓட்டி உள்ளனர். இதுதான் இப்போதைய தமிழ் சினிமா நிலை என தியேட்டர்கள் அதிபர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.