மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
வவுனியா ஓமந்தை கல்லுப் போட்ட குளத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர், கர்ப்பமடைந்துள்ளமை கண்டறியப்பட்டது
இந்த விடயம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் குறித்த மாணவியிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலம் என்பவற்றின் அடிப்படையில், நொச்சிக்குளத்தை சேர்ந்த 50 வயது ஆசிரியர் ஒருவரே இதற்கு காணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதனை கண்டித்தும் சிறுமிக்கு நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரதேச மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து ஓமந்தை காவல் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காவற்துறையினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்ததுடன் தமது கோரிக்கை தொடர்பிலும் விளக்கம் அளித்துள்ளனர்.