ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக இருந்த RK நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால்., பண பட்டுவாடா புகாரால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் 21 தேதி RK நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக சார்பாக மதுசூதனன், திமுக சார்பாக மருது கணேஷ், பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்ற முறை தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இந்த முறை குக்கர் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறி., இந்த முறையும் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், RK நகர் கள நிலவரம் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை எடப்பாடிக்கு அளித்துள்ளது.
அதில், அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க தினகரன் தரப்பினர் பணத்தை அள்ளி வீசுகின்றனர். இதனால் அதிமுகவின் ஓட்டுகள் நிச்சயம் பிரியும்.
அதிமுகவின் ஓட்டுகள் பிரிவது திமுகவுக்கு சாதகமாக அமையும். கூட்டணி பலத்தோடு திமுக களம் இறங்கி உள்ளதால், RK நகர் இடைத்தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் சூழல் நிலவுவதாக அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், கையும், களவுமாக பிடித்து, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க, இளைஞர்கள் குழுக்களை அதிமுகவில் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது