யாழ். கோட்டைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது.
குறித்த உணவுத் திருவிழா யாழ். கோட்டைக்கு முன்பாக 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையிலும், யாழ்.உணவுத் திருவிழா என்ற பெயரில் புதிய வணிக முயற்சியில் இலங்கை இராணுவம் இறங்கியுள்ளதாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.