சுவிஸ் நாட்டுக்கு மாணவர் விசா பெற்றுத் தருவதாகக் கூறி நெடுந்தீவு இளைஞனிடம் 16 லட்சம் ரூபா மோசடி செய்த சாவகச்சேரி மற்றும் கொழும் பைச் சேர்ந்தோர் மோசடிப் பணத்தை வழங்க இணங்கியதன் பெயரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞனிடம் 2015ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டு மாணவர் விசாவின் பெயரில் 16 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுவிட்டு விசா வழங்காது, பணத்தையும் மீளச் செலுத்தாத காரணத்தினால் யாழ்ப்பாணம் விசேட குற்றத் தடுப்புபொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சாவகச்சேரி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறி யலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் 10 லட்சம் ரூபா பணத்தை நீதிமன்றம் ஊடாக முறைப்பாட்டாளரிடம் வழங்கிய நிலையில் குறித்த இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட னர்.
குறித்த வழக்கை நீதவான் க.சதீஸ்வரன் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.