அமெரிக்காவில் என்னை விட்டுவிடுங்கள் என்று இளைஞர் பொலிசாரிடம் கெஞ்சுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள ஹொட்டலில் கடந்த 2016-ஆம் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை தடுப்பதற்காக ஹொட்டல் முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அப்போது பொலிசார் ஹொட்டலில் நிராயுதபாணியாக எதிர்ப்பட்ட இளைஞரை சுட முற்பட்டார்.
இதைக் கண்ட அந்த இளைஞர் தரையில் படுத்துக் கொண்டே, தன்னை விட்டு விடுங்கள் என்று கண்ணீருடன் கெஞ்சினார்.
ஆனால் பொலிசார் இதை கண்டு கொள்ளாமல் குறித்த இளைஞரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் பொலிசாரின் சீருடையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இது குறித்த வழக்கில் அந்த நபர் துப்பாக்கியை எடுக்க முயன்றதாக எண்ணி, சுட்டதாக பொலிசார் தெரிவித்ததால், இந்த வழக்கில் தொடர்புடை பொலிசார் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் (26-year-old father-of-two Daniel Shaver,)