கோவிலில் இருந்து மாலையும் கையுமாக வெளிவந்த பிக்பாஸ் பிரபலம்.! டுவீட்டரில் வெளியான புகைப்படம்..!!
விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .
கமல் தொகுத்து வழங்கிய ஏராளமான சினிமா பிரபலங்கள் அதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து பிறகு சில பிரபலங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.
ஆனால் நடிகை பிந்து மாதவிக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஸ் கல்யாணுக்கும் பிந்து மாதவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. தற்போது பிந்து மாதவியும் ஹரிஸ் கல்யாணும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
பிறகு கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கையில் மாலையுடன் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டாவை பிந்து மாதவி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.