அம்பானியின் மகன் திருமணத்திற்கு தங்கத்தாலான அழைப்பிதல்!! (வீடியோ)

ஆசியாவில் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 41.3 பில்லியன் ஆகும். இவருக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற இரண்டு மகன்களும், இஷா என்ற மகளும் உள்ளனர்.

இதில் மூத்த மகனுக்கு தற்போது 26 வயதாகியுள்ள நிலையில் அவரும் தனது தந்தையோடு இணைந்து தொழில்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஜியோ நெட்வேர்க்கின் தலைவராகவும், 4 ஜி சேவை வழங்குனராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், இவரின் திருமண அழைப்பிதழ் தங்கத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பதழின் விலை மட்டும் 1.5 லட்சம் என கூறப்படுகிறது.

தற்போது இந்த திருமண அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இது வரை ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் என்ற செய்திகுறித்து அம்பானி தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.