சென்னை வெள்ளத்தில் மலர்ந்த காதல்! அழகான கதை!

2015 சென்னை வெள்ள நிவாரண பணியின் போது துவங்கிய காதல், அடுத்த ஆண்டு டிசம்பரில் பெற்றோரின் சம்மதம் பெற்று, இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைப்பெற்றது.

aadhav-kannadasan-gets-engaged-to-vinodhnie-suresh-1-720x450இது கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் காதல் கதை.

பொன்மாலைப் பொழுது எனும் படத்தில் அறிமுகமான ஆதவ் தொடர்ந்து நடிப்புத்துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

இவருக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் கடந்த 6ம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமானவர் வினோதினி, 2015ம்ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது இருவரும் பல உதவிகளை செய்து வந்தோம்.

அப்போதிருந்தே நட்பை வளர்த்து வந்தோம், அதன்பின்னர் எங்களுக்குள் காதல் இருந்ததை புரிந்து கொண்டோம்.

பெற்றோர் முதலில் சம்மதிக்கவில்லை, காதலில் உறுதியாக இருந்ததால் ஏற்றுக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

நண்பர்களாக அறிமுகமான நாங்கள் இருவருக்கும் இடையிலான நட்பின் புனிதத்தையும் போற்றுவோம் என்கிறார் ஆதவ்.