அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய லெபனானின் கோரிக்கை.!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம்யை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Trumpஜெருசலேம் பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. தொடர் போர் காரணமாக ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. டெல் அவிவ் என்ற பகுதி இஸ்ரேலில் தலைநகராக இருந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த அறிவிப்பு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபு நாடுகள் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது லெபனான் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்காவிற்கு எண்ணெய் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி தடை என பல திட்டங்கள் தீட்டியுள்ளதாம்.

அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. எனவே, லெபனானின் கோரிக்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.