பசிபிக் கடலில் பிஜிதீவுகள் அருகே உள்ள டோங்கா தீவில் இன்று 5.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹிகிபோ நகருக்கு தென்கிழக்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவில், 5.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு போன்ற எந்தவித தகவலும் இது வரை வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
பிஜிதீவு பசிபிக்கடலில் பூகம்ப அபாய பகுதியில் உள்ளமையால் இங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.