தெற்கு ஆஸ்திரேலியாவின் Glenelg கடலில் காணாமல்போன 15 வயது இந்திய மாணவியின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
காற்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது குழுவினருடன் தெற்கு ஆஸ்திரேலியா வந்திருந்த இம்மாணவி, தனது 4 நண்பிகளுடன் நேற்று கடலுக்குச் சென்றபோது நீரோட்டத்தில் சிக்கி காணாமல்போயிருந்தார்.
இவருடன் சென்ற 4 நண்பிகளும், கடலிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், குறித்த மாணவியை மட்டும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில் பல மணிநேரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின், மாணவியின் உடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு இதே கடல்பகுதியில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.