புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேரூந்துகளில் இலவசமாக போக்குவரத்து வசதி வழங்கப்பபடவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று நடத்திய ஏடகவியலாளர் சந்திப்பின் போதே சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு பேரூந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சீருடையுடன் புகையிரத பருவகால சீட்டுக்களை கொண்டு வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.