பெரிய நடிகர்கள் வழக்கமாக ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் செய்து வருகின்றனர். அதாவது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களை பார்த்து அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தான்.
விஜய் எப்போதுமே புதுப்படங்களை பார்ப்பது படம் தனக்கு பிடித்துவிட்டால் அப்படக்குழுவை பாராட்டுவது என செய்வார். அண்மையில் கூட கார்த்தி நடித்த தீரன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிபிராஜ் நடிப்பில் அண்மையில் சத்யா என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பார்த்த விஜய் சிபிராஜுக்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளாராம்.
இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.