கத்தோலிக்க தேவாலயம் மீது இனந்தெரியாதோா் தாக்குதல்!

யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில்  அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது  இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

இந்த சம்பவம் நேற்று(10)  அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த  தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீற்றா்கள் தொலைவில் யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையம் மற்றும் இராணுவமுகாம் என்பன உள்ளன.

யாழ் நகரில் கத்தோலிக்க தேவாலயம் மீது இனந்தெரியாதோா் தாக்குதல்!

இந்நிலையில் குறித்த ஆலயத்தில் புனித அந்தோனியார் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

அண்மைக்காலமாக  வடக்கு மாகாணத்தில் தெய்வங்களின் உருவச்சிலைகள் உடைக்கப்படுவதும் மற்றும் தெருவில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாவது  தொடா்ச்சியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வழிபாட்டு தலங்களும் தெய்வங்களின் உருவச்சிலைகளும்  தாக்கப்பட்டாலும் குறித்த சம்பவங்கள் தொடா்பில் இது வரையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

5a2deec892074-IBCTAMIL