ட்ரம்பின் தீர்மானம் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பநிலை!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமை, மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அரபிய நாடுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, குறித்த பகுதியில் ஒருவித பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் தீர்மானம் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பநிலையை ஏற்படுத்தும்

கடந்த புதன்கிழமை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மேற்குக்கரை, மற்றும் ஹாசா பகுதிகளில் வன்முறைகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதிரகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் குறித்த செயற்பாட்டினால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் செயன் முறையில் அமெரிக்கா பங்கு பெறமுடியாது என அரபிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு விவகார அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிக்கு அமெரிக்கா நடுநிலையாகச் செயற்படுமென்பதை  எம்மால்  நம்ப முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக, அங்கீகரித்தமை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி இந்தோனேஷியாவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஜெருசலேம் நெருக்கடி தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.