விரைவில் நடைபெறவிருக்கிற குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு உள்ளது. அந்நாட்டு தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர்” என பகீர் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான குஜராத்தில் 2 ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காகவேண்டி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவியேற்க உள்ள ராகுல் காந்தியும், தனது சொந்த மாநிலத்தில் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் மோடியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பலன்பூரில் நேற்று நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி, “காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் ஒரு கூட்டம் நடந்ததாக பத்திரிக்கையில் நேற்று செய்தி வெளியாகியுள்ளது.
அதில் பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அதற்கு மறுநாள் என்னை ‘இழிவான நபர்’ என மணிசங்கர் அய்யர் கூறுகிறார். குஜராத்தின் முதல்வராக காங்கிரசை சேர்ந்த அகமது படேல் ஆவதற்கு பாகிஸ்தான் ராணுவ முன்னாள் தளபதி சர்தார் அர்ஷத் ரபீக் ஆதரவு தெரிவிக்கிறார். குஜராத் மக்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டுமென” தெரிவித்துள்ளார்.