தமிழ் அர­சுக் கட்­சி பெரும் அந்தரத்தில்!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் பெரும் அதி­ருப்தி நில­வு­கின்­றது.

Capturegdrgஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை, கூட்­ட­மைப்­பின் தலைமை மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உயர் பீடத்­தி­னர் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ் சுமத்­தி­யுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லுக்­கான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீட்­டில் முதல் சுற்­றில் 80 சத­வீத இணக்­கம் எட்­டப்­பட்­டி­ருந்­தது. இரண்­டாம் சுற்­றில் ஏற்­க­னவே எட்­டப்­பட்ட இணக்­க­மும் இல்­லா­மல்­போ­னது.

இத­னை­ய­டுத்து பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான ரெலோ, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்ள முடி­யாது என்று அறி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து ஏற்­பட்ட பிணக்கை சரி­செய்­யும் நோக்­கு­டன், கொழும்­பில்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

எதிர்­கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

அந்­தக் கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சி­கள் கோரி­ய­தற்­கும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னால் விட்­டுக் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக உள்­ளுர் தலை­வர்­க­ளால் விச­னம் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­னர்.

மாவட்ட நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கா­மல், கட்­சித் தலைமை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைத் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ்­சு­மத்­தி­யுள்­ள­னர்.

மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு முன்­னர் வழங்­கப்­பட்­டது. கடும் எதிர்ப்பை அடுத்து பின்­னர், இரண்டு ஆண்­டு­கள் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், எஞ்­சிய இரண்டு ஆண்­டு­கள் ரெலோ­வுக்கு என்று மாற்­றப்­பட்­டது.

ஆனால் இந்­தத் தீர்­மா­னத்­தை­யும் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் மாவட்­டக் கிளை­யி­னர் போர்க் கொடி தூக்­கி­யுள்­ள­னர். கட்­சித் தலை­மைக்கு எழுத்து மூல­மான கடி­த­மும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆச­னப்­பங்­கீட்டை ஏற்­க­மு­டி­யாது என்­றும், இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்­றும் அந்­தக் கடி­தத்­தில் கோரப்­பட்­டுள்­ளது.