நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும்,பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.அப்போது,இந்தியா முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
குஜராத்திலும்,பீகாரிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் போது,நாடு முழுவதும் ஏன் தடை விதிக்க முடியாது? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.பீகாரில் மது விற்பனைக்கு தடை விதித்ததால் குற்றங்கள்,சாலை விபத்துகள் குறைந்து இருப்பதாகவும் நிதிஷ்குமார் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.