ரெலோ கட்சியின் அமைப்பாளர் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட முடிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

uday suriyanஇதுதொடர்பில் ரெலோ கட்சியின் குறித்த அமைப்பாளர் கிளிநொச்சியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நாடெங்கிலுமுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக கட்சிகள் கட்டுப்பணம் செலுத்திவருகின்றன.

இதன்படி யாழ் மாவட்டத்தில் இதுவரை ஏழு கட்சிகள் கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தினை எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் எனவும் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் எனவும் யாழ்.மாவட்ட செயலக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.