குஜராத்தில் ராகுல் காந்தியை முத்தமிட்ட குழந்தை!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோவிலுக்கு சென்ற போது பா.ஜனதாவினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களில் முக்கியமானதும்.பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமுமான குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

201712102124160782_When-a-kid-came-running-to-Rahul-Gandhi-at-a-Gujarat-temple_SECVPFவெறும் மாநில தேர்தலாக இல்லாமல்அடுத்த பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இது கருதப்படுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த தேர்தலை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றன.மாநிலத்தில் சுமார் 22 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜனதாவும்,அங்கு எப்படியாவது ஆட்சியை பிடித்து விட துடிக்கும் காங்கிரசும் கடந்த பல வாரங்களாக மாநிலத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குறைகூறி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்தி வருகிறார்.குஜராத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சோமநாத் கோவிலுக்கு சென்றபோது,ஓட்டுக்காக அவர் கோவிலுக்கு செல்வதாக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் அவர் குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் டோக்ராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராஞ்சோட்ஜி கோவிலுக்கு நேற்று சென்றார்.அப்போது அந்த கோவிலுக்கு வெளியே திரண்டிருந்தவர்கள் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.இதனால் ராகுல்காந்தி தனது கட்சி தொண்டர்களுடன் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.

பாரதீய ஜனதாவினர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய போது அங்கிருந்த குழந்தை வேகமாக ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்தது.பாதுகாப்பை மீறி ஓடிவந்த குழந்தையை ராகுல் காந்தி வாரி அனைத்து கையில் தூக்கிக்கொண்டார்.அப்போது ராகுல் காந்திக்கு குழந்தை அன்புநிறைந்த முத்தத்தை கொடுத்து மகிழ்ச்சியை கொட்டியது. ராகுல் காந்தியும் மிகவும் மனநிறைவாக காணப்பட்டார்.அங்கிருந்தவர்கள் நெஞ்சை தொடும் வண்ணம் குழந்தை ராகுலிடம் பாசத்தை காட்டியது.ராகுல் காந்தி தன்னுடைய மனிதாபிமான ஆளுமையை வெளிக்காட்டுவது இது முதல்முறை கிடையாது.

பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் பெண்களிடம் மிகவும் அமைதியாக ராகுல் காந்தி குறைகளை கேட்டறிந்தார்.புதுடெல்லியில் இருந்து ஆமதாபாத்திற்கு சென்ற போது விமான நிலையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று பயணித்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தார்.