பிரபல நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தான் பத்மாவதி. இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கடும் போராட்டம் நடித்தி வருகிறார்கள்.
இந்த படத்தை திரையிட்டால் பல பிரச்சனைகள் கிளம்பும் என்றும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாத ரன்வீர் சிங் தற்போது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.
ரன்வீர் சிங்கிற்கும் ஆலியா பட்டும் இணைந்து சிம்பா இயக்க போகும் படத்தில் நடிக்கப்போகிறார்கள். படத்தின் போஸ்டரை ரோஹித் ஷெட்டி வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தை கரன் ஜோகர் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படம் 2018 ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.