ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அதேபோல ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும், ஒரு மோசமான குணாதிசயமும் உள்ளது.அவைகள் என்ன என்பதை ஒரு ஒரு ராசிக்கும் பாப்போம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் மோதல் போக்கு குணத்தை கொண்டவர்கள். அதனால் இவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போன்றே இருக்கும்.இது இந்த ராசியின் இயல்பு குணமாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களிடம் அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள்.வாழ்வை மேம்பட உதவும் அறிவுரைகளை மற்றவர்கள் கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் பேரார்வம் மிக்கவர்கள். இவர்களிடம் மிகுந்த ஆவல் இருக்கும். இவர்களுக்கு தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. அதனால் இவர்களுக்கு தங்களுக்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாமல், மிகவும் சிரமப்படுவார்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும்.அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திலும் தொட்டதற்கு எல்லாம் கோபம் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களிடம் பொறாமை குணம் அதிகமாக இருக்கும். ஈகோ, பொறுமையின்மை மற்றும் அடம் பிடிப்பது ஆகியவை இவர்களிடம் மோசமான குணங்களாக காணப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நேர்மை குணம் மிக்கவர்கள். அதனால் இவர்கள் எல்லாமே கனகட்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இவர்களிடம் யாராவது எதாவது மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கூறினால், அதிகமாக கோபம் கொள்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள்.தான் எடுத்த முடிவே சரியா, தவறா என்பது தெரியாமல் தடுமாறுவார்கள். இவர்கள் மிகவும் சோம்பேறியானவர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் யாராக இருந்தாலும் தங்கள் பேச்சால் மாற்றி விடும் தன்மை கொண்டுள்ளவர்கள். ஆனால் இது இவர்களது மோசமான பழக்கம் என்பது யாருக்கும் தெரியாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிகப்படியான தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அதுவே தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை இருக்க கூடாது. அதனால் நம்மால் முடியாத விடயமா என கருதி, சிலவற்றில் கோட்டைவிட்டு விடுவார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் அதிக கூச்சம் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு யாருடன் பழகலாம், யாருடன் பழகக் கூடாது என்பதில் சிக்கலாக இருக்கும். ஆனால் இவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் முள் குணம் கொண்டுள்ளவர்கள். மற்றவரது உணர்ச்சியை கொஞ்சம் குத்தி பார்ப்பார்கள். அடம் மற்றும் தான் என்ற குணம் கொஞ்சம் இருக்கும்.இவர்களது பிடிவாத குணம் தான் இவர்களிடம் இருக்கும் மோசமான பண்பாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் எதையாவது கூறி தங்கள் கடமைகளை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அவர்கள் முன்னெடுத்த காரியமாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம்.ஆனால் இவர்களுக்கு முன் கோபம் அதிகமாக காணப்படும்.