பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜாஸ்ப்ரிட் பும்ராவின் தாத்தா ஆற்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்ப்ரிட் பும்ரா குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் தன் தாயாருடன் வசித்து வருகிறார். பும்ராவின் தந்தை இறந்த பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குடும்பம் இரண்டாக பிரிந்தது. பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் (84) வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் தனது பேரன் பும்ராவை ஒரு முறையாவது சந்தித்து கட்டிப்பிடித்து பேச வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கூட ஒரு முறை பேட்டியளித்தார்.
இவர் கடந்த டிசம்பர் 8 ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக அவரது மகள் ராஜீந்தர் கவுர் வஸ்த்ராபூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சட்டையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததை வைத்தே அவர் பும்ராவின் தாத்தா என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரை மீட்டு போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவரது மகள் ராஜீந்தர் கவுர் கூறுகையில், டிசம்பர் 8 ம் தேதி காலை 1:30 மணியளவில் என் தந்தை தல்ஜீத் அருகே கோயல் இர்கிசிட்டி என்ற இடத்தில் பும்ராவின் தாயார், தல்ஜீத் கவுரைச் சந்தித்தார். ஆனால் அவர் என் தந்தை சந்திக்க மறுத்ததோடு, பும்ராவையும் சந்திக்க கூடாது என கூறியுள்ளார் என்றார். இதனால் மனமுடைந்து தான் பும்ராவின் தாத்தா தற்கொலை செய்திருப்பார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.