யாழ்.சங்கானையில் வாள்களுடன் வந்த குழுவினர் பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு!!

யாழில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தி, கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பழை பொலிஸார் இன்று காலை மேலும் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

Capturedfயாழ்ப்பாணம் சங்கானை வைத்தியசாலைக்கும் தொட்டிலடிச் சந்திக்கும் இடையே இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

குறித்த கும்பல், வாள்களை காட்டி மக்களை அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு, மக்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட நிலையில் பெண்ணொருவரின் சங்கிலியையும் அறுத்துச்சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து தெல்லிப்பழைப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு பைப்புகள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் இன்று தெல்லிப்பழையில் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் 27 வயதுடையவர்களெனவும் மற்றைய இருவரும் 24 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் நால்வரும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

08-538x300  யாழ்.சங்கானையில் வாள்களுடன் வந்த குழுவினர் பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு!! 0812697-2-feec0d7bf742822f79187b334aede7a6  யாழ்.சங்கானையில் வாள்களுடன் வந்த குழுவினர் பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு!! 12697 2 feec0d7bf742822f79187b334aede7a6