நாகர்கோவிலில் காரில் சென்ற பெண்களை வாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற இளைஞர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ரத்தினம் என்பவர் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் போது, பார்வதிபுரம் என்னும் இடத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த மூன்று பேர் தங்களுக்கு வழி விடவில்லை என்று காரில் உள்ளவர்களை வாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் தப்ப முயற்சித்த இளைஞர்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களை மீட்டு விசாரனை நடித்து வருகின்றனர்.