கட்டுப்பணம் செலுத்திய கருணா!!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கருணா தலைமையிலான சுயேட்சைக் குழு இன்று மாலை கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரான ‘கருணா அம்மான்’ என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.

ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட போதிலும், அக்கட்சி சட்ட ரீதியான பதிவு இல்லாத காரணத்தினால், இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றனர்.

இதற்கமைய மட்டக்களப்பில் 9 சபைகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச சபையிலும், அம்பாறையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும் போட்டியிடுவதற்காக இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

இதன் போது, கட்சியின் செயலாளர் வீ.கமலதாஸ், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

625.0.560.320.310.730.053.800.670.160.90 (1)