இலங்கையின் மேற்கே, தலைநகர் கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு கொஹுவல பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் தலைநகர் கொழும்பின் கொஹுவல பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் குளியலறையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரின் சடலத்தினை மீட்டுள்ளனர்.
இலங்கையின் வட மத்திய மாகாணம் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இளைஞரின் மரணம் தொடர்பான காரணம் தெரியவில்லையாயினும் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.