செல்பி மோகத்தால் இளைஞர் பலி!

ஒடிசாவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக பலியாகியுள்ளார்.காட்டு யானையுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகத்தில் யானையை நெருங்கிய போது யானை மிதித்ததில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)ஒடிசா மாநிலம்,ஆங்குல் மாவட்டத்தில் கமார் வனப்பகுதி சரகத்தில் கோயில் அருகே காட்டு யானை புகுந்துள்ளது.கிராம மக்கள் அந்த யானையை காட்டுக்குள் அனுப்ப விரட்டி வந்துள்ளனர்.அப்போது செல்பி எடுப்பதற்காக ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் யானையின் அருகில் சென்ற போது மிதிபட்டு பலியாகியுள்ளார்.

ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் பல்லாஹரா பகுதியின் நிமிடிபேதா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.கிராம மக்களுடன் காட்டிலாகா அதிகாரிகளும் யானையை அதன் கூட்டத்துக்குள் அனுப்ப விரட்டியுள்ளனர்.இதில் செல்பி மோகத்தால் நாயக் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

காயமடைந்த நிலையில் அருகில் உள்ள கமார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி நாயக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.