திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட மரண விபத்தினால் நெடுஞ்சாலை 401 மேற்கின் சகல பகுதிகளும் எற்றோபிக்கோவில் மூடப்பட்டன.
திங்கள்கிழமை காலை அதிகாரிகளிற்கு பல அழைப்புகள் கிடைத்ததாகவும் நெடுஞ்சாலை மேற்கு பாதை பாவனையில் இருந்த லேன் ஒன்றை வாகனம் ஒன்று தடைசெய்து கொண்டிருப்பதாகவும் அழைப்புகளில் தெரிவிகப்பட்டதாகவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி சிமித் தெரிவித்தார். எற்றோபிக்கோ மார்ட்டின் குரோவ் வீதிக்கருகில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட அதிகாலை 5.20-மணியளவில் டிரக்டர் டிரெயிலர் ஒன்றும் கார் ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்து குறிப்பிட்ட பகுதியில் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவசர சேவை பிரிவினர் சம்பவம் நடந்த இடத்தை அடைந்த போது வாகனத்தின் சாரதி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்து போனவர் மட்டுமே காரில் இருந்ததாகவும் இவரின் வயது ஆணா பெண்ணா என்பன வெளியிடப்படவில்லை.
நடந்தது என்ன மரணத்திற்கான காரணம் என்ன என்பன குறித்து தாங்கள் இன்னமும் விசாரனை செய்வதாக சிமித் தெரிவித்தார்.
போக்குவரத்து லாரியின் முன்பக்கமும் கணிசமான சேதமடைந்துள்ளது.ஆனால் சாரதிக்கு எதுவும் ஏற்படவில்லை.காரின் பின்பகுதி முற்றிலும் படு மோசமாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சாட்சியங்களை பொலிசார் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலை மேற்கு அனைத்து லைன்களும் மார்ட்டின் குரோவ் வீதியில் மூடப்பட்டன. திறப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகலாம் என கருதப்படுகின்றது.