இரவு உணவுக்கு பின் இதை குடியுங்கள், டயட் இல்லாமல் எடையை குறைக்கலாம்!!

உடல் எடையைக் குறைக்க டயட் மிகவும் முக்கியம், ஆனால் உடல் எடை குறைக்கும் விடயத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளை இவ்வளவு காலம் மட்டும் செய்தால் போதும் அல்லது உடல் எடை குறையும் வரை மட்டும் செய்தால் போதும் என்ற நினைப்பது தவறு.

diet-illamal-edai-kuraiyadiet-tips-tamildiet-in-tamilwegit-loss-dietஎனவே உடல் எடையை குறைக்க டயட் என்று இல்லாமல், நமது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றுவதுடன், அதையே பழக்கப்படுத்தி பின்பற்றுவது மிகவும் சிறந்தது.

உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியது?
  • உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தூக்கத்திற்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம், எனவே தினமும் ஆழ்ந்து உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • உணவுகளை சாப்பிடும் போது அவற்றை அப்படியே விழுங்காமல் நன்றாக கடித்து மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் மென்று சாப்பிடுவதால் குறைவான உணவை மட்டுமே சாப்பிட தோன்றும்.
  • முழுதாக எண்ணெயில் பொறித்த உணவு அல்லது அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • கலோரி குறைவான உணவை எடுத்துக் கொள்வதுடன் முழுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
  • காலை உணவை மட்டும் எப்போதும் தவிர்த்து விடவே கூடாது. ஏனெனில் காலை உணவை தவிர்த்தால் மதிய நேரத்தில் அளவுக்கு அதிகமான பசியெடுத்து அதிகமான உணவை சாப்பிட தோன்றும்.
  • ஒரே நேரத்தில் உணவை அதிகமாக சாப்பிடாமல், மூன்று அல்லது ஆறு வேளையாக உணவு சாப்பிடுவதை பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சூப், சாலட், பழம், நட்ஸ் போன்ற ஆரோக்கியமானவற்றை சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
  • உணவு சாப்பிடுவதற்கும் 30 நிமிடத்திற்கு முன்பு 1 கப் பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் சாப்பிடும் உணவு விரைவில் செரிமானம் ஆகும்.
  • இரவு உணவு சாப்பிடும் போது எட்டு மணிக்கு முன்பாக சாப்பிட்டு விட வேண்டும். அதன் பின் ஹெர்பல் டீ அல்லது க்ரீன் டீ போன்று குடிக்கலாம்.
  • நம் உடலுக்குத் தேவையான தண்ணீரை தினமும் தவறாமல் குடிக்க வேண்டும். அதோடு புரோட்டீன் நிறைந்த உணவுகளை ஸ்நாக்ஸாக சாப்பிட வேண்டும்.
  • டயட் இல்லாமல் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 5 முறை நன்றாக வாய் விட்டு சிரிக்க வேண்டும், இதனால் அடிவயிற்று தசைகள் தளர்ச்சி அடையும்.
  • மூக்கு வழியாக மூச்சை உள் இழுத்து வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு மூச்சு விடுவதை குறைந்தது ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.