இன்று முதல் இறுக்கமடையும் சட்டம் – இலங்கையில்

தேர்தல் சட்டங்கள் இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

police-spokesman_0தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் நேரடியாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவும் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகளைக் கொண்டு பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பயணம் செய்யும் வாகனத்திலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் மட்டுமே வேட்பாளர்களின் புகைப்படங்கள், பதாகைகள் காட்சிப்படுத்த முடியும் என அறிவித்துள்ளார். வேட்பு மனுக்களை கோரும் முதல் கட்ட நடவடிக்கை இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.