அதிவேக-அதிசொகுசு தொடருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணமாகியது!

இலங்கையில் ஏற்பட்டுள்ள தொடருந்துவழி குழப்பங்களின் மத்தியில் கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை சேவையில் ஈடுபடும் அதிவேக-அதிசொகுசு (Intercity AC) தொடருந்து  யாழ்ப்பாணத்துக்கான பயணத்தினை இன்று முன்னெடுத்துள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90இதன்படி, குறித்த அதிவேக-அதிசொகுசு தொடருந்து சேவை மட்டும் அதன் வழமையான நேரமான அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த தொடருந்து அதன் வழமையான நேரமான மதியம் 1.45 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளது. பயணிகளுக்கான பயணச் சீட்டுக்கள் தொடருந்தின் உள்ளே வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட தொகையிலான பயணிகள் சற்றுமுன்னர் கொழும்புக்குப் பயணமாகியுள்ளதாகவும் எமது களநிலைச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றாலும் நாளையும் இந்த தொடருந்து மட்டும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.