சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தினகரனுக்கு கௌரவ பிரச்சினையாக உள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று கட்சியை மீட்க வேண்டும் என்ற முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பிலிருந்து சுமார் 50 ஆயிரம் குக்கர்கள் இறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அவற்றை பிரச்சாரத்திற்கு வரும் பெண்களுக்கு குக்கரை கொடுத்து ஓட்டு கேட்க வைத்து, பின்னர் அவர்களையே வைத்துக்கொள்ள சொல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மொத்தமாக அனைவரது வீட்டிலும் பெரிய சைஸ் குக்கர் ஒன்றை கொடுத்து விடலாம் என்று சிலர் தினகரனிடம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், குக்கர் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்தோடு மாட்டிக்கொள்வோம். கடந்த முறை முதல்வர், அமைச்சர்கள் இருந்ததால் அவர்கள் பெயர்தான் வெளியானது.
இந்த முறை நமக்கு எதிராக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் நமக்கு எதிராக இருப்பதால் நாம சிக்கிக்கொள்ள கூடாது என்று தினகரன் கூறினாராம்.
கடந்த முறையே நாம ரூ. 4000 கொடுத்துள்ளோம். இந்த முறை கணக்கெடுத்து வையுங்கள். எவ்வளவு கொடுக்கலாம் என்பதை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்று தினகரன் கூறியதாக அவரது ஆதரவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.