ரஜினி காந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு கிடைத்த பரிசு..!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினி காந்த் நிறைய படங்கள் மூலம் மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்தவர். நடிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உண்டு. இவர் ஸ்டைல் தான் இவரை இன்னும் ஹீரோவாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது.

12-1513058872-rajini432வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அந்த ஒரு படத்திற்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் கொடுப்பார்கள். இவருக்கு முன்னணி நடிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதை உள்ளது. இவர் கிராமத்து மக்கள் மனதில் தெய்வமாக கருதப்படுபவர். தற்போது ரஜினி நடித்துக்கொண்டிருப்பது இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படத்தில் தான். இன்று ரஜினியின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரஜினி காந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு கிடைத்த பரிசு..!

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தை தயாரிக்கும் வொண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.