மனைவி செய்த காரியம்: கணவன் வைத்தியசாலையில்!!

தனது திறமையை நிரூபிப்பதற்கு முயற்சித்து, அது தோல்வியடைந்த நிலையில் கணவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த மனைவியொருவர் பற்றிய தகவல் பதிவாகியுள்ளது.

625.500.560.320.160.600.666.800.900.160.90அழகுக் கலை நிபுணரான குறித்த பெண், தனது கணவரின் நரைத்த தலை முடியை கருமையாக்க ஹெயார் டை பயன்படுத்தியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், அழகுக் கலை பயில்வதில் ஆர்வம் காட்டி அழகுக் கலை பயிற்சி நெறி ஒன்றை பூர்த்தி செய்துள்ளார்.

தலை மயிரை எவ்வாறு கருமையாக்குவது என்பது குறித்து கற்றுக்கொண்ட குறித்த பெண், கற்றுக்கொண்ட விடயங்களை கணவரின் தலையில் பரீட்சித்துள்ளார்.

ஹெயார் டை ஒன்றை கொண்டு வருமாறு கணவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திக் கூறியுள்ளார்.

கணவர் ஹெயார் டை பக்கட் ஒன்றுடன் வந்ததாகவும் அதனை குறித்த பெண் கணவரின் தலையில் பூசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கணவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டுள்ளது.

ஹெயார் டை காரணமாகவே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள வியலுவ பிரதேசத்தில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.