உயிரிழப்புகள் கூட ஏற்படலாம்! அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரீயானி!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருந்து விலகிச்செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

mahinda-suport-meeting-51கட்சியின் நடவடிக்கைகள் காரணமாகவே அவர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருந்து வெளியேறி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“ஸ்ரீயானி விஜேவிக்ரம எங்களிடம் இருந்து பிரிந்து செல்லுமளவிற்கு மனக்கசப்புகள் இருந்ததில்லை.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருந்து அவர் விலகிச்சென்றமைக்கு காரணமாவர்கள் யார் என்பதை தேர்தல் முடிந்த பின்னர் அறிவிப்போம்.

எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்துக்கொள்ளாமல் எமது மாவட்டத்திற்கு திரும்பி செல்ல முடியாது.

அவ்வாறு சென்றால் சில வேளைகளில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம எமது கட்சித்தலைவர்களிடம் கூறியிருந்தார்” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, நேற்று மாலை ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.