தமிழ் நாட்டில் பாஜக, ஜெயலலிதாவின் அதிமுகவை விட பலமானதா?
தமிழக அரசு தமிழகத்தின் ஏழு மாவட்டத்தில் கெயில் வழித்தடத்திலுள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து தலைமைச் செயலாளர் தலைமையில், தொழில்துறைச் செயலாளர் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக்கண்காணிப்பில்
கருத்துக் கேட்பு 2013 ல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் எழுத்து மூலமாக ஒவ்வொருவரின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.வீடியோக் காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4000க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் முறையான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலோடு கெயில்திட்டத்தை விளைநிலத்தில் போடக்கூடாது என அறிவித்துவிட்டார்.
நாம் கேட்பது பாஜக குழு இதைவிட சிறப்பாக என்ன வேலை செய்யப் போகிறது.
அந்தக் குழு தமிழக அரசை விட அதிகாரம் பெற்றதா?
ஏழு மாவட்டத்தில் 50க்கு மேலான சட்டமன்ற உறுப்பினர்களையும் பத்துக்கு மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெருவாரியான உள்ளாட்சி நிருவாகிகளையும் கொண்டு ஒரு மக்கள் சக்தியாக இயங்கிய ஜெலலிதா அவர்கள் தலைமையிலான
அதிமுக கட்சியை விட தமிழ் நாட்டு பாஜக செல்வாக்கு மிக்கதா?
காவல்துறை படைகொண்டுவந்து குழாய்கள் பதித்ததை மக்களின் போராட்டம் எதிர்கொண்டு தடுத்து நிறுத்தியதை ஜெயலலிதா அவர்களும் அனைத்துக் கட்சிகளும்,அனைத்து விவசாயிகள் சங்கங்களும் மதித்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்றனர்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த முடிவுக்கு எதிராக பாஜக குழு விவசாயிகளிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.