ரயில் என்ஜின் சாரதியொருவரின் மாதச் சம்பளம் இரண்டு லட்சம் ரூபா என போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறும் போது;ரயில் என்ஜின் சாரதிகளின் சம்பளத்தை 10000 ரூபாவினால் உயர்த்தினால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களது சம்பளம் 22000 ரூபாவினால் உயர்த்தப்படும்.2020ஆம் ஆண்டளவில் சம்பளம் 54000 ரூபாவினால் உயர்த்தப்படும்.
மேலதிக நேர கொடுப்பனவுடன் மாதமொன்றுக்கு ரயில் என்ஜின் சாரதிகள் 226000 சம்பளம் பெற்றுக்கொள்கின்றனர்.சிலர் இரண்டு லட்சம், ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொள்கின்றனர்.ஒன்பது மணித்தியாலங்கள் ஓய்வு நேரம் காணப்படுகின்றது.இந்த ஓய்வு காலத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு 600 ரூபா என்ற அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.