கருவளையத்தை போக்க தொடர வேண்டிய விஷயங்கள்.!

ld2268

எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையில் பராமரித்தால் தான் அந்த விஷயம் அப்படியே இருக்கும், அப்படி தான் முக அழகும், பராமரிப்பு இல்லாவிட்டால் முக அழகு பறிபோய்விடும். முகத்தில் சிலருக்கு கண்களை சுற்றி கரு வளையம் இருக்கும். இந்த கருவளையம் சரியான பராமரிப்பு இல்லையென்றால் தான் வரும். மேலும், சரியான தூக்கம் இல்லையென்றாலும் வரும்.

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும். சிலர் டென்ஷன் அதிகம் உள்ள வேலையில் இருந்தாலும் இந்த மாதிரியான பாதிப்பிற்கு ஆளாவார்கள். கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை தரமற்றதாக இருந்தாலும், கருவளையம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கருவளையத்தை போக்க பின் தொடர வேண்டிய சுலபமான விஷயங்கள்.!

மேலும், குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும், சருமம் தொங்கிப் போகாமல் இருக்கும். கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவி, விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். இவற்றை பின்தொடர்ந்தால் விரைவில் கருவளையம் காணாமல் போய்விடும்.