டாக்சியில் பயணம் செய்யும் பெண்களை வினோதமாக கற்பழித்த டிரைவர்: பிரான்ஸில் திடுக்!

பிரான்ஸில் டாக்சி டிரைவர் ஒருவர் சொக்லேட் பரிசளித்து அவரது வாகனத்தில் பயணம் செய்த பெண்களை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bla Bla செயலியின் மூலம் தனது வாகனத்தை இயக்கி வந்த 52 வயது நபர் ஒருவர், தன் வாகனத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு சொக்லேட் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த சொக்லேட்டில் கலக்கப்படும் போதை மருந்தினால் பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். அப்போது அவர்களே அறியாத வகையில் அவர்களின் கர்ப்பை சூறையாடிவந்துள்ளான் அந்த கொடூரன்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட போதை சொக்லேட்டில் அதிகளவு போதை மருந்து கலக்கப்பட்டதால் அவர் சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த நபர் இதுவரை 20 முதல் 30 வயது வரையிலான எட்டு பெண்களை கற்பழித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இதே விவகாரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்கிற கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையின் காரணமாகவே அப்படி நடந்து கொண்டதாக கூறி வரும் டாக்சி டிரைவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (6)