நேற்று நீதிமன்றத்தில் இன்று பரீட்சை மண்டபத்தில்
காலியில் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 10 ஆம் திகதி காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் காலியில் விடுதி ஒன்றில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் இம்முறை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களாவர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் வருகை தந்த வேன் ஒன்றும் இரு மகிழுர்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது மாணவர்கள் மூவரையும் நிபந்தனைக்குட்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.